ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது...!


ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதன்போது அந்த கட்சியின் பல்வேறு பதவி நிலைகளுக்கு நியமனங்கள் செய்யப்பட்டன.

எத்துல்கோட்டேயில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கினார்.

இதன்போது கட்சியின் புதிய தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டார்.

அத்துடன் பொதுசெயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார தொடர்ந்து செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டதுடன், கட்சியின் தேசிய அமைப்பாளராக தொடர்ந்தும் திஸ்ஸ அத்தநாயக்க செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

கட்சிக்கு சிரேஷ்ட பிரதி தவிசாளர்களும் இன்று நியமிக்கப்பட்டார்கள்.

இம்தியாஸ் பாக்கீர்மாக்கார், கபீர் ஹசீம், லக்ஷ்மன் கிரியல்ல, ராஜித்த சேனாரத்ன, குமார வெல்கம மற்றும் ரவீந்திர சமரவிக்ரம ஆகியோர் கட்சியின் சிரேஷ்ட பிரதி தவிசாளர்களாக நியமனம் பெற்றவர்களாவர்.

அதேநேரம் தலதா அத்துகோரல, திலீப் வெத ஆராச்சி, எம்.எம்.எம். ஹலீம், கயந்த கருணாதிலக்க, ஹரின் ஃபெர்ணாண்டோ, சந்திராணி பண்டார, பீ. ஹரிசன் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் கட்சியின் உப தவிசாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

கட்சியின் பொருளாளராக பேராசிரியர் ஹர்ச டி சில்வாவும், கட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக அஜித் பி பெரேராவும் நியமிக்கப்பட்டார்கள்.

சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக நிரோஷன் பெரேராவும், பிரதி பொதுசெயலாளர்களாக அசோக அபேசிங்க, நலின் பண்டார, ரோஹனி குமாரி கவிரத்ன மற்றும் பி.உமா சந்திரபோஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டார்கள்.

அத்துடன் பிரதி தேசிய அமைப்பாளர்களாக புத்திக பத்திரன, ஜே.சி.அலவத்துவெல மற்றும் ரஞ்சித் அலுவிஹார ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவினால் இன்று நியமிக்கப்பட்டனர்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு கட்சியின் உறுப்புரிமையை வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பெருந்தோட்டத்துறைக்கான தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவு செய்யப்பட்டார்

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK