ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு உடல்களை கட்டாய தகனம் செய்வதனை உடன் நிறுத்துமாறு வலியுறுத்துகின்றது.

கொரோனாவினால் உயிரிழப்போரின் சடலங்களை கட்டாய தகனத்துக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும்- ஐ.நா சபை


கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை கட்டாய தகனத்துக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்போரை கட்டாயமாக தகனம் செய்யும் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் இலங்கையை வலியுறுத்தியுள்ளதுடன் இது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் நம்பிக்கைகளுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளனர்.


உடல்களை தகனம் செய்வதுதான் ஒரே வழி எனக் குறிப்பிடுவதானது மனித உரிமை மீறலுக்குச் சமம் என நிபுணர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இலங்கையில் அல்லது வேறு நாடுகளில் இறந்த உடல்களை அடக்கம் செய்வது கொவிட் 19 தொற்றுப் பரவும் அபாயத்திற்கு வழிவகுக்கிறது என்பதற்கு உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ அல்லது அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என நிபுணர்கள் தெரிவித்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..



BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK