ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க் குழுக் கூட்டம் இன்று (25)இடம் பெற்றது.இந் நிகழ்வில் கட்சியின் பதவி நிலை அங்கவத்தவர்கள் நியமனமும் அனுமதி பெறுவதை இலக்காகக் கொண்டும் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை எதுல் கோட்டேயிலுள்ள கட்சித் தலைமை செயலகத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் சிறு சிறு யாப்புத் திருத்தங்களுடன் 2021 ஆம் ஆண்டுக்கான பதவி நிலை அங்கவத்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தவிசாளராக கண்டி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஹாரிஸ்பதுவ தொகுதியின் பிரதான அமைப்பாளருமான எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவு செய்யப்பட்டார்