அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்துவிட்டு கணக்கீடு நடத்த தொடங்கியிருப்பது தவறு-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச



அஸ்வெசும அல்லது எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் குடும்ப அலகின் வருமானச் செலவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வறுமைக் கோட்டைத் துல்லியாக தீர்மானித்திருக்க வேண்டும் என்றும், உண்மையான ஏழைகள் யார் என்று கண்டுபிடிருக்க முடியும் என்றாலும், தற்போதைய அரசாங்கம் முதலில் திட்டத்தை ஆரம்பித்து பின்னர் கணக்கீடு நடத்த தொடங்கியுள்ளதாகவும்,அது தவறு என்றும், வங்குரோத்து நாட்டில் சரியானதைச் சரியான வழியில் செய்யக் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அநுராதபுரம் லங்காராம விகாரை மற்றும் ஜயந்தி விகாரைக்கு

நேற்று (1) விஜயம் செய்து வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பிரதம சங்கநாயக்க விகாரையின் மதிப்பிற்குரிய பண்டிதர் கலாநிதி நுகேதன்னே மங்கள தர்ம கீர்த்தி ஸ்ரீ சோபித ரதனஜோதி பஞ்சானந்தபிதான நாயக்க தேரரை சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் ஜனசவிய நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்த தேவையுடைய ஏழை மக்களைப் போன்று இன்றும் இருப்பதாக மகாநாயக்க தேரர் இங்கு தெரிவித்ததோடு சிலர் சமுர்த்தி கொடுப்பணவு துண்டிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

ஜனசவிய 24 மாதங்களுக்கே வழங்கப்பட்டதாகவும்,சேமிப்பு, முதலீடு மற்றும் தனிப்பட்ட ஆரோக்கியம் ஆகியவற்றில் கவனம் இதனூடாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.அன்றைய அரசாங்கம் இரண்டு வருடங்கள் மக்களுக்கு உதவியளிப்பதாகவும் அதன் பிறகு மக்கள் தாங்களாகவே எழ வேண்டும் என்றும் கூறியது.

நாட்டு மக்களை மேம்படுத்துவதற்கு ஒரு நல்ல வேலைத்திட்டத்தை மேற்கொள்ள முடியும் என்றபோதிலும்,அதற்கான தெளிவான அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்றும்,தசராஜ தர்மத்தைப் பின்பற்றி கண்டிப்பாக இருக்க வேண்டிய போது கண்டிப்பாகவும் மென்மையாக இருக்க வேண்டிய போது மென்மையாகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

லங்காராம விகாரைக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அநுராதபுரம் லங்காராம விவாரையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்து விகாராதிபதியும் வடமத்திய மாகாண பிரதம நீதிமன்ற சங்கநாயக்கர் ரலபனாவே தம்மஜோதி சுட்டிக்காட்டினார்.அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலாசார அலுவல்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் லங்காராம விகாரைக்கு அணைக்கட்டை அமைப்பதற்கு 50 இலட்சம் ரூபாவை வழங்கியிருந்தமையையும் குறித்த நிதியில் அணைக்கட்டு நிர்மானிக்கப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

லங்காராம விகாரையின் விகாராதிபதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆசிகளையும் வழங்கினார்.




BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK