அரசுக்கு ஆதரவு வழங்கி இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்கிய இஷாக், எம்.பி


2019 பயங்கரவாத தாக்குதலின் பிற்பாடு பல இஸ்லாமிய அமைப்புக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் தடைகள் விதிக்கப்பட்டது.  இதன்போது தடைசெய்யப்பட்ட எதுவித குற்றச்சாட்டுக்களுக்கும் உட்படாத அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்குமாறு கடந்த காலங்களில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேண்டுகோள் விடுத்திருந்தனர்

குறித்த விடயம் தொடர்பில் கவனம்செலுத்தி உடனடி தீர்வினை பெற்றுத்தருவதாக கடந்த 5 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இஷாக், ஹரீஸ் எம்.பி யிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அதன் விளைவாக புதன்கிழமை (26) திகதியிடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 5 இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடைகள் நீக்க்கப்பட்டுள்ளது.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ, ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் - UTJ, அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் - ACTJ, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ , ஜமாஅத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா - JASM ஆகிய அமைப்புக்கள் மீதான தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

தமது வேண்டுகோளை ஏற்று இவ்வமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இவ்விடயத்தை செய்துமுடிக்க தமது பூரண ஒத்துழைப்பை வழங்கிய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானி சாகல ரத்னாயக்க ஆகியோருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK