அமெரிக்க குடியுரிமைக்கு கோட்டாபய மனு : இந்திய ஊடகம் தகவல்

 


இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். ஆனால் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டதால் கடந்த 2019-ம் ஆண்டு இந்த குடியுரிமையை அவர் துறந்தார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியால் கடந்த ஜூலை மாதம் கோத்தபய ராஜபக்சே பதவி விலக நேரிட்டது. அத்துடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய அவர் 2 மாதங்களுக்குப்பின் நாடு திரும்பினார். இந்த நிலையில் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது வக்கீல்கள் இந்த மனுவை அளித்து உள்ளனர். எனினும் கோத்தபய ராஜபக்சேவின் இந்த மனுவை அமெரிக்க அரசு இன்னும் பரிசீலனைக்கு எடுக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK