ஜனவரி மாத இறுதிக்குள் அமைச்சரவையில் மாற்றம் செய்து ஆறு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணக்கப்பாட்டுடன் இந்த அமைச்சரவைத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட அமைச்சரவையின் சிரேஷ்டர்களுக்கு மேலும் அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வஜிர அபேவர்தன மற்றும்ஐக்கிய மக்கள் சக்தி்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், ஆரம்ப கட்ட நடவடிக்கைகளின் கீழ் ஆறு ஆளுநர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், வடமேற்கு மற்றும் மத்திய மேல் மாகாண ஆளுநர்களை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.