பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை போதைப்பொருள் மாத்திரைகளை கைப்பற்றுவதற்கு விசேட அதிரடிப்படையினரால் முடிந்துள்ளது. இதனுடன் தொடர்புப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை மேல் மாகாண நடவடிக்கை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக வெல்லம்பிட்டி சேதவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 62 வயதை கொண்டவர் என்றும் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் மாத்திரைகளை விற்பனை செய்தவர் என்றும் தெரியவந்துள்ளது.