இருபதாம் திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களித்து அண்மையில் பிரதமரின் இப்தாரில் பங்குகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரானிடம் தனது முகநூலில் சில கேள்விகளை கேட்டிருந்தார்  தற்போது அந்த கேள்விகளுக்கு காரசாரமாக பதில் அளித்துள்ள இம்ரான் மகரூப் நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை நேரடியாக தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் தனது முகநூலில் வழங்கிய பதில்கள் இதோ!  

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக் அவர்களே 20 ஆம் திருத்த சட்டத்துக்கு வாக்களித்தபின் நாடாளுமன்றத்திலோ ஊடகத்திலோ வாயை திறக்காத நீங்கள் 7 மாதங்களின் பின் என்னிடம் கேள்வி கேட்க உங்கள் வாயை திறந்திருப்பது எனக்கு சந்தோசமே.

இந்த பிரச்சினைகளுக்கு 2000 ஆம் ஆண்டு முதல் சுமார் 15 வருட ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சராக இருக்கும் ஒருவர் 2015 இலிருந்து 4 1/2 வருடங்கள் அரச பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த என்னிடம் பதிலை எதிர்பார்ப்பது உங்கள் அரசியல் ஆளுமையை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.இருந்தும் எனக்கு வாக்களித்த மக்களுக்காக என்னால்இந்த கேள்விகளுக்கு பதில் கூற முடியும்.

துறையடி புத்தர் சிலை தொடர்பாக

துறையடியில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்ட போது ஒரு பெரும்பான்மை கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து நான் அதற்கு எதிராக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குரல் கொடுத்து அதன் நிர்மாணப்பணிகளை நிறுத்தினேன்.ஒரு முஸ்லிம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் வாக்குகளால் நாடாளுமன்றம் செல்லும் நீங்கள் அது தொடர்பாக வாய் திறக்கவில்லையே?

அத்துடன் இப்போது அங்கு புத்தர் சிலை இல்லை இனிமேலும் புத்தர்சிலை வைக்கப்படாமல் ஆளும் கட்சியில் உள்ள நீங்களே தடுக்க வேண்டும். 

தோப்பூர் உப பிரதேச செயலகம் தொடர்பாக

தோப்பூர் உப பிரதேச செயலக பிரச்சினை என்பது நீங்கள் அரசியலுக்கு வரும் முன்பு கூட காணப்பட்ட பல தசாப்த கால பிரச்சினை.நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் வரை அது பெயரளவில் மட்டுமே உப பிரதேச செயலகமாக இருந்தது.அதில் எந்தவித சேவை நடவடிக்கைகளும் நடைபெறவில்லை.இதன்பின் நான் இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்து அவரை அங்கு நேரடியாக அழைத்தும் சென்றிருந்தேன்.அங்கு வந்து அவரும் அதை தரமுயர்த்துவதாக வாக்குறுதி அளித்து அதுவரை இயங்காமல் இருந்த பிரதேச செயலகத்தை கிழமையில் இரு நாட்கள் இயங்க செய்தார்.அத்துடன் பாழடைந்திருந்த கட்டிடத்தை நான் தான் புனர்நிர்மாணம் செய்தென்.அதன்பின் இதை தரமுயர்த்த தேவையான அமைச்சரவை பாத்திரமும் எனது முயற்சியால் தயாரிக்கப்பட்டது.அதன்பின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் எழுந்த பிரச்சினை காரணமாக சிறிது தாமதித்திருந்தாலும் அமைச்சரவை அனுமதி பெற்று கெஸட் பன்னும் நிலையில் இருக்கும்போதே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.இப்போது ஒன்றும் கெட்டுவிடவில்லை நாம் தயாரித்த அமைச்சரவை பத்திரத்தை கொண்டு ஆளும் கட்சி உறுப்பினராகிய நீங்கள் அதை தரமுயர்த்தி வழமைபோன்று உங்கள் பெயரை போட்டுக்கொள்ளலாம்.

குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகம் தொடர்பாக

குறிஞ்சாக்கேணி பிரதேச செயலகம் 2000 ஆம் ஆண்டே உருவாகியிருக்க வேண்டியது.அதை தடுத்ததே முஸ்லிம் காங்கிரஸே இது தொடர்பாக விரிவான விளக்கத்தை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளேன் 

வெள்ளைமணல் கருமலையூற்று துறைமுக காணி பிரச்சினை தொடர்பாக 

வெள்ளைமணல் கருமலையூற்று துறைமுக காணி பிரச்சினை சம்மந்தமாக கேட்டிருந்தீர்கள்.இது நான் பிறந்து ஒரு வருடத்தில் அதாவது 1984 ஆம் ஆண்டு இப்பகுதி காணிகள் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமானவை என கெசட் செய்யப்பட்டது.உங்கள் கட்சி தலைவர்களாக இருந்த மர்ஹூம் அஸ்ரப் மற்றும் ஹக்கீம் ஆகியோர் பலமிக்க துறைமுக அமைச்சர்களாக இருந்தனர்.அதுவும் 1994 ஆம் ஆண்டு ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நீங்கள் இருந்தீர்கள்.அவர்களாலேயே இந்த காணியை பெற்றுத்தர முடியாதபோது ஒரு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் ஏன் இதை தீர்க்க முடியவில்லை என கேட்பது உங்கள் அரசியல் அறிவீனமே.இருந்தும் இக்காணிகளை மீட்க நான் செய்த முயற்சிகளை தனியாக பதிவிடுவேன். 

செல்வநகர் நீனா கேணி காணி

செல்வநகர் நீனா கேணி காணிகள் நீங்கள் தனியொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 2010-2015 காலப்பகுதியிலேயே விகாரைக்குரிய காணிகள் என கெசட் பண்ணப்பட்டது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட்டபின் அங்கு இரண்டு சமூகத்தினரிடையே இன முறுகல் ஒன்று ஏற்பட்ட்து.உடனடியாக நான் அங்கு சென்று இனமுறுகளை சுமூகமாக தீர்த்து இன்று வரை அங்கு விவசாய நடவடிக்கைகளை செய்ய அனுமதி பெற்றுக்கொடுத்த்துளேன். அத்துடன் அமைச்சர் வஜிர அபேவர்தன தோப்பூருக்கு வந்த போது குறித்த விகாரையின் விகாராதிபதியுடன் அமைச்சர் மூலம் பேசியே இதை சுமூகமாக தீர்த்தேன்.2010-2015 இல் தனியொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது கெசட் செய்யப்பட்ட்தை தடுக்காத நீங்கள் என்னிடம் கேள்வி கேட்பது வேடிக்கை 

தம்புள்ள பள்ளிவாயல் தொடர்பாக 

உங்கள் கட்சி தலைவர்தான் நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தார் அவர் மூலம் இதை நீங்கள் தீர்த்திருக்க முடியுமே.அதை விடுத்து முதன்முதல் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதற்கான தீர்வை எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்வது 

முஸ்லிம் அரசாங்க அதிபர் சம்மந்தமாக

உங்கள் கட்சியின் இருதயம் ,முஸ்லிம்களின் தலைநகர் என நீங்கள் கூறும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறைக்கு இதுவரை ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபரை உங்கள் தேசிய தலைவராலோ உங்களாலோ நியமிக்கமுடியவில்லை.ஆனால் முதன்முதல் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரிடம் இதற்கான தீர்வை எதிர்பார்ப்பதை என்னவென்று சொல்வது.ஆனால் 1988 ஆம் ஆண்டு எனது தந்தையால் திருகோணமலைக்கு முஸ்லிம் அரசாங்க அதிபரக செய்ருதீன் என்பவர் நியமிக்கப்பட்டார்.அதுபோன்று நல்லாட்சியிலும் நியமிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது.நீங்களும் உங்கள் கட்சி தலைவரும் ஒத்துழைத்திருந்தால் நியமித்திருக்கலாம்.

தீயணைப்பு பிரிவு அமைப்பது தொடர்பாக

பிரதேச, மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் தீயணைப்பு பிரிவு அமைப்பது தொடர்பாக அனுமதி பெற்றதை தொடர்ந்து இதற்கான அனுமதியை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டேன் அப்போது அமைச்சராக இருந்த பைசல் முஸ்தபாவிடம் இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

அதன்பின் கிண்ணியா நகர சபை தவிசாளராக S.H.M நளீம் தெரிவுசெய்யப்பட்டவுடன் அவருடன் இனைந்து இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி இலங்கையில் அமைக்கப்படவுள்ள மூன்று தீயணைப்பு பிரிவுகளில் கின்னியாவும் தெரிவுசெய்யப்பட்டது. 

அதன்பின் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன இந்த அமைச்சை பொறுப்பேற்றவுடன் இந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதுடன் நாம் அமைச்சரிடம் 2019-03-18 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் 2019-03-25 ஆம் திகதி அமைச்சரை சந்தித்து வேண்டுகோள் விடுத்து அதற்கான அனுமதியையும்பெற்றிருந்தோம். 

இதை அறிந்த நீங்கள் இதில் உங்கள் பெயரை போட உடனடியாக கையால் கடிதம் ஒன்றை எழுதி அமைச்சரின் குறிப்புடன் கூடிய ஒப்பத்தை வாங்கி முகப்புத்தகத்தில் நான்தான் கொண்டுவரப்போகிறேன் என உரிமைகோரி அதை குழப்ப எத்தனித்தீர்கள்.இதனால் இது மேலும் தாமதமாகி ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இப்பொழுது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள நீங்கள் கிடப்பில் உள்ளதை தூசி தட்டி வழமை போன்று உங்கள் பெயரை போடலாம்.

கருமலையூற்று பள்ளி பிரச்சினை சம்மந்தமாக

நீங்கள் தனியொரு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 2010-2015 காலப்பகுதியிலேயே கருமலையூற்று பள்ளி உடைக்கப்பட்ட்து.அப்போது மாகாணசபை உறுப்பினராக இருந்த நான்தான் ஊடகங்கள் மூலம் (BBC உள்ளிட்ட ) வெளி உலகுக்கு தெரியப்படுத்தினேன்.அப்போது கூட நீங்கள் இதுபற்றி வாய் திறக்கவில்லை அதன்பின் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பின்தான் இங்கு ஜும்மா நடாத்துவதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தேன்.இதுவரை இதுபற்றி எங்குமே வாய் திறக்காத நீங்கள் இப்பொழுது மட்டும் கேள்வி கேட்பது வேடிக்கை

சண்முகா பிரச்சினை சம்மந்தமாக 

சண்முகா கல்லூரியில் முன்னர் இருந்த ஆசிரியைகள் யாரும் அபாயா உடுத்தி சென்றதில்லை இந்து பாரம்பரியத்தை கொண்ட அந்த கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியைகள் அபாயாவுடன் சென்றதால் பிரச்சினை ஏற்பட்டு இன முறுகல் வரை சென்றது 

இது சண்முகாவில் உள்ள பிரச்சினை மட்டுமல்ல இலங்கையில் உள்ள பல பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களில் உள்ள பிரச்சினை 

இதன்போது எம்மால் தற்காலிக தீர்வும் நிரந்தர தீர்வும் பெற முற்சிகள் எடுக்கப்பட்ட்ன தற்காலிக தீர்வாக அந்த ஆசிரியைகளுக்கு வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றமும் நிரந்தர தீர்வாக அபாயா அணிய அனுமதி வழங்க விசேட சுற்றுநிருபம் வெளியிட ஏற்பாடு செய்தென்.ஆனால் இதற்கான பூரண அழுத்தம் கொடுக்க முஸ்லிம் கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமையால் அதை வெளியிடமுடியவில்லை.

மீனவர் பிரச்சினை 

எமது பகுதியில் உள்ள மீனவர்கள் படும் துயரை போக்க 7 km பிரச்சினையை தீர்க்க அமைச்சரை நேரடியாக சந்தித்த பின் அமைச்சரும் அதற்கு சம்மதித்து அதற்கான கடிதத்தையும் பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்பியிருந்தார்.ஆனால் அதை நடைமுறைப்படுத்த பணிப்பாளர் நாயகம் சம்மதிக்கவில்லை.இதன்பின் மீண்டும் கலந்துரையாடி இது தொடர்பான விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள நாராவிடம் பொறுப்பளிக்கப்பட்டது.அவர்களின் ஆய்வு முடிவடைவத்துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.இவ்வளவு காலம் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக பிரதி அமைச்சராக இருந்த நீங்கள் இதை தீர்த்திருக்கலாமே.அதுவும் நான் இப்பிரச்சினை தொடர்பாக எங்கு சென்றாலும் என்னை பின்தொடர்ந்து அங்கு வரும் நீங்கள் ,பணிப்பாளர் நாயகத்துடன் லிப்ட் இல் வைத்து செலஃபீ எடுத்த நீங்கள் ஏன் இதை தீர்க்கவில்லை 

தனியார் காணியில் உள்ள இராணுவ முகாம் சம்மந்தமாக 

அப்போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த ருவன் விஜேவர்தனவை கிண்ணியாவுக்கு அழைத்து வந்து தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரியிருந்தேன்.அவரும் பாதுகாப்பு முக்கியத்துவமற்ற சில முகாம்களை அகற்ற உடன்பட்டார்.ஒரு சில அகற்றப்பட் ஆனால் அதன்பின் ஏற்படட்ட சஹ்ரான் பிரச்சினை காரணமாக அது முடியாமல் போனது.

இது தவிர இன்னும் பல விடயங்கள் உங்களோடு உரையாட உள்ளது. நாடாளுமன்றத்தில் ஏழு மாதங்களாக வாயே திறக்காத நீங்கள் சமூகத்துக்கு எவ்வளவோ பிரச்சினைகள் வந்தபோதும் ஊடகங்கள் முன் வாயே திறக்காத உங்களுக்கு மக்கள் மத்தியில் பேச ஒரு சந்தர்ப்பத்தை தருகிறேன்.சக்தி டிவி யின் மின்னல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னுடன் விவாதத்துக்கு அழைக்கிறேன்.என்னுடன் விவாதத்துக்கு வந்து உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை மக்கள் முன் சொல்லுங்கள்.முகப்புத்தகத்தில் விவாதம் செய்வதை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.ஏன் என்றால் எமது சமூகம் சம்மந்தமான பிரச்சினைகள் ஆயிரம் உள்ளன.உங்களை போன்று முகப்புத்தகத்தில் நேரம் செலவிட என்னால் முடியாது.

மீண்டும் கூறுகிறேன் என்னுடன் தொலைக்காட்சி விவாதத்துக்கு வாருங்கள் உங்களுடன் பேச நிறைய விடயங்கள் உள்ளன.