ஹாலா மரிக்கார் என்ற இளமைத் தாரகை இருபது வயதான விருது பெற்ற கவிஞர் ஆவார். மேலும் இவர் கட்டுரையாளர், கலைஞர் மற்றும் சொற்பொழிவாளரும் ஆவார்.  இவர் பதினெட்டாவது வயதில் தனது முதல் கவிதைத் தொகுப்பான "ஆயிரம் காகித நாரைகள் "( THOUSAND PAPER CRANES) என்ற நூலை இரண்டாயிரத்துப் பத்தொன்பதாம் ஆண்டில் வெளியிட்டார்.

ஹாலா  இறைவனின் கிருபையால் சமூகத்தில் ஒரு புரட்சியை  ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்  பல புகழ்பெற்ற எழுத்தாளர்கள்,  வெற்றியாளர்கள்,கிரேட்டியன் விருதின்  நீதவான்கள்,சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட பிற நபர்கள் பற்றி எழுதுகிறார் .   

அத்தோடு இவர்  சின்ஜியாங்கில் உள்ள உய்குர்களின் இனப்படு கொலை, சிரியர்கள், ரோஹிங்யன மக்கள், பலஸ்தீனியர்கள் மற்றும் உலகெங்கிலும்  இன்னும் கவனிக்கப்படாத பிரச்சினைகள் குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எழுதுகிறார்.       

இவர் ஒரு தீவிர வரலாற்று ஆய்வாளருமாவார்.தற்போது பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரத்தில் அமைந்துள்ள QUAID-I-AZAM UNIVERSITY இல் உயிர் தொழிநுட்பக் கற்கை (பயோடெக்னாலஜி) நெறித் துறையில் தனது மேல் படிப்பைத் தொடர்கிறார் .

ஹாலா என்ற இரும்புப் பெண்மணி 2015, 2018 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற குயின்ஸ் காமன்வெல்த் கட்டுரைப் போட்டியில் தங்க விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

100 வருட பால்ஃபோர் பிரகடனத்தைக் குறிக்கும் (இலங்கை பலஸ்தீன தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட) தேசிய கட்டுரை போட்டியில், பாக்கிர் மாக்கார்   நிறுவனத்துடன் இணைந்து செயற்படும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஏற்பாடு செய்த அகில இலங்கை  கட்டுரைப் போட்டியிலும்  முதலிடங்களைத் தட்டிக்கொண்டார்.     

ஹாலா இலங்கை மாடல் (model) ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பாராட்டு விருதையும் வென்றார்.அங்கு அவர் சர்வதேச பத்திரிகைப் படையில் அல் ஜசீராவின் ஒரு அங்கமாகவும் திகழ்ந்தார். 

எழுத்து மற்றும் சொற்பொழிவு பிரிவுகளில் பல பிராந்திய, மாவட்ட, மாகாண,தேசிய விருதுகளையும் இவர் வென்றுள்ளார்.

2020ம் ஆண்டில் தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையிலான ஏழாயிரத்து ஐநூறு பங்கேற்பாளர்களைக் கொண்டு நடாத்தப்பட்ட  போட்டியில் முதலிடத்தையும் பெற்றார். 

2020 ஆம் ஆண்டில், தி ஸ்ட்ரேஞ்சர்ஸ் கவிஞர்களுடன் இணைந்து வட அமெரிக்காவின் இஸ்லாமிய மாநாடு நடத்திய சர்வதேச கவிதைச் போட்டியில் 2 வது இடத்தைப் பெற்றார். மேலும் PESH EMSA  வுடன் இணைந்து EPIC இளைஞர்கள் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த சர்வதேச கவிதைச் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

அவரது கவிதைகள் தி டெய்லி மிரர், ஜூனியர் மிரர், தி ஃபண்டே டைம்ஸ், தி ட்ரெண்ட், தி என்லைட்மன்ட் , தி கோபி மேக், மற்றும் ஜர்னீஸ்( 2009 ஆம் ஆண்டின் குயின்ஸ் காமன்வெல்த் கட்டுரை போட்டியின் சிறந்த கட்டுரை மற்றும் கவிதை  இடம்பெற்றிருந்த சம்பாட்டின் வெளியீடு)போன்ற  பல்வேறு உலக மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.  

மேலும் டெய்லி மிரர்,சண்டே டைம்ஸ்,மவுபிம ,விடிவெள்ளி , வீரகேசரி, தி ஜூனியர் மிரர், மற்றும் சோப்ரியா உதான போன்ற பல செய்தித்தாள்களில் அவர் ஒரு எழுத்தாளராக வளம் வந்துமுள்ளார்.

எழுத்து, கலை மற்றும் கலாச்சார சேவைகளுக்கான ரத்னதீப அறக்கட்டளையால் தேஷாபிமாணி விருதுக்கு ஹாலா பரிந்துரைக்கப்பட்டார்.மேலும் அவர் ஆங்கில இலக்கியத் துறையில் மொழித்திறன் மற்றும் பிற திறமைகளுக்காக  முன்னாள் உதவி இந்திய உயர் ஸ்தானிகரால் பாராட்டப்பட்டார். கண்டியில் உள்ள பதியுத்தீன் மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் மாணவத் தலைவியாக இருந்துள்ளார்.

 இவருக்கு இவரது பாடசாலையில் மஹ்மூதியன் ராணி என்ற பட்டமும் வழங்கப்பட்டது.இந்தப் பட்டத்தைப் பொறுத்தவரையில் பாடசாலையில் நல்ல மாணவராகத் திகழ்ந்ததற்காக வழங்கப்படும் பட்டம் என்பது குறிப்பிட தக்கது.