கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு ஆதரவாகவோ எதிராக வாக்களிக்குமாறு கட்சியின் தலைவர் எதனையும் என்னிடம் தெரிக்கவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மிகவும் புத்திசாலிமாகச் செயற்பட்டுள்ளார். அதனை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன் இவ்வாறு தெரிவிக்கிறார் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) இஷாக் ரஹ்மான்,

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் அவர்கள் கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், இது தொடர்பில்  வழங்கிய குரல்வழி பதிவை இங்கே தருகிறோம்.

(எ.எச்.சித்தீக் காரியப்பர்)