அனுராதபுரமாவட்டத்தில் நான்கு  முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்டத்தில் இதுவரை ஒரேயொரு முஸ்லிம் பாடசாலை மாத்திரமே தேசிய பாடசாலையாக காணப்பட்டது. 

கெக்கிராவ கல்வி வலயத்திற்கு உற்பட்ட அ/கலாவெவ மத்திய கல்லூரி, கெபித்திகொழ்ழாவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மஹ்மூத் பதியுதீன் மஹா வித்தியாலயம், கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயம், அனுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட இக்கிரிழ்ழாவ அந்நூர் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன