மேலும் மூன்று கொவிட் 19 மரணங்கள் பதிவு..!


நாட்டில் மேலும் மூன்று கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி நாட்டில் இதுவரை கொவிட்19 என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளன.

கொழும்பு 8 பகுதியை சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து கொவிட் 19 தொற்றுறுதியானவராக அடையாளம் காணப்பட்டார்.

இதனையடுத்து அவர், வெலிசரை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் இன்று(31) உயிரிழந்துள்ளார்.

கொவிட்19 நிமோனியா நிலை அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடுவெளை பகுதியை சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர் நெவில் பிரணாந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவர் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட்19 நிமோனியா நிலை, இதயம் செயலிழந்தமை அவரது மரணத்திற்கான காரணங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குருவத்தொட்டை பகுதியை சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 தொற்றுறுதியானவராக கண்டறியப்பட்டார்.

பின்னர் அவர் நேற்று(30) உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 இதய நோய் மற்றும் உயர் குருதியமுக்கம் என்பன ஆகும்.


BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK