திருமணம்,விவாக விடயங்கள் தொடர்பான தகவல்கள்,திட்டமிடல்கள் அடங்கிய முதலாவது  ஆங்கில மொழிமூலமான சஞ்சிகை "அல்ஷவாஜ்"  (31) ஞயிற்றுக்கிழமை வெள்ளவத்தையில் உள்ள கிறீன் பலேஸ் ஹோட்டலில் வைத்து  வெளியீட்டு வைக்கப்பட்டது.  நுாலின் முதற்பிரதியை   பிரதம அதிதியாக கலந்து கொண்ட   டவா் கோல் நிறுவனத்தின் பணிப்பாளா் சபை உறுப்பினா் புரவலா் ஹாசீம் உமா் சஞ்சிகையின் பிரதம ஆசிரியை  பாத்திமா சஸ்னாவிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.  டெயிலி எக்ஸ்பிரஸ் ஆங்கில பத்திரிகையாசிரியா் ஹனா இப்ராகீம், கலாநிதி பரினா ருசைக் சிரேஸ்ட விரிவுரையாளா் கொழும்பு பல்கழைக்கழகம்,  பவாஸா தாகா வை.எம்.எம். ஏ பெண்கள் அமைப்பு தலைவி,  மபாசா பாருக்,  மற்றும் இமாசா டில்சானி பெரேரா ஆகியோறும் அருகில் காணப்படுகின்றனா்.