ஐக்கிய மக்கள் சக்தியின் உதவி செயலாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவால் இன்று (01-02-2021) இந்நியமனம் வழங்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக  கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும்  வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராகவும் இம்ரான் மகரூப் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறுப்பிடத்தக்கது.