அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் குழுவிற்கு விண்ணப்பியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் வர்தக மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களின் கிழக்குமாகாண தலைவராக நியமிக்கப்பட்டபின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கல்ளுக்கு இலக்காகி நல்லாட்சி அரசு காலத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கான நிவாரணத்தை வேண்டி விண்ணப்பித்தும் தீர்வு கிடைக்காதவர்களும், அதே போன்று தற்போதைய அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கல்ளுக்கு உள்ளாகியவர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் பழிவாங்கல் குழுவிற்கு விண்ணப்பிப்பதற்கான தமது ஆவணங்களை சமர்பிக்கப்பவும்.எதிர்காலத்தில் எமது அரசாங்கம் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பத்தில் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்படடவர்களுக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.
ஆவணங்களை சமர்பிப்பதுக்கான முகவரி உள்ளிட்ட விடயங்கள் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
அத்துடன் கிழக்குமாகாணத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK