அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு விசேட ஆணைக்குழுவை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர் தம்மிக பிரியந்த சமரகோன், கேமா குமுதினி விக்கிரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியசர் ரத்னபிரிய குருசிங்க ஆகியோர் அடங்களாக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.