அமான் அஷ்ரப் தலைமையில் தேசிய முஸ்லிம் பேரவை உதயம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், காலஞ்சென்ற அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரபின் புதல்வாரன அமான் அஷ்ரப் தலைமையில் இலங்கை தேசிய முஸ்லிம் பேரவை எனும் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி வர்த்தகர்கள், சட்டத்தரணிகள், வைத்திய கலாநிதிகள் மற்றும் சிவில் செயற்பட்டாளர்கள் உள்ளிடக்நிகிய ஒரு குழுவினராலேயே இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த சோனர், மேமன், மலே மற்றும் தாவூதி போரா ஆகிய குழுக்களின் பிரதிநிதிகளே இந்த அமைப்பின் ஸ்தாபகர்களாவர்.

இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனங்களிடையே நல்லிணக்கத்தினை உருவாக்கி சிறந்த உறவினை கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தேசிய முஸ்லிம் பேரவையின் கட்டமைப்பு தொடர்பான அறிக்கையொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவிற்கு கடந்த ஜனவரி 20ஆம் திகதி கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK