கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பரிந்துரையானது, எந்தவொரு மத அல்லது பிற காரணங்களுக்காகவும் அகற்றப்படாமல் செயற்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.