பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்த தீர்மானம்


புதிய சுகாதார வழிமுறைகளுக்கமைவாக பாடசாலை விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவது குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷக்கிடையில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று அபாயம் அதிகமுள்ள மேல் மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களில் விளையாட்டுப்போட்டிகளை ஆரம்பிக்க முடியும். மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களை எக்காரணம் கொண்டும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற அனுமதிக்க வேண்டாம் என்றும் இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தகைய அபாயமுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பிள்ளைகள் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதனால் வைரஸ் பரவல் ஏற்பட முடியும் என்றும் இங்கு மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மெய்வல்லுனர் போட்டிகள், குழு விளையாட்டுக்கள், பாடசாலை பிக் மெச் போட்டி போன்றவற்றை நடத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நோய் அறிகுறிகளுடைய மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள எந்தவொரு பிள்ளைகளையும் விளையாட்டுப் போட்டிகளுக்கு உட்படுத்தக்கூடாது . சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்கள் தேவைக்கேற்ப முழுமைப்படுத்தப்பட்டு முறையாக பாடசாலை விளையாட்டுப் போட்டி ஆரம்பிப்பதிலுள்ள முக்கியத்துவம் குறித்தும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK