குருணாகல் மாவட்டத்தில் 2,452 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்... - Flash News

Breaking Updates

Home Top Ad

விளம்பரப் பகுதி 076 665 9 665

Tuesday, November 3, 2020

குருணாகல் மாவட்டத்தில் 2,452 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்...


குருணாகல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக இதுவரை 2,452 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசியப்பொருட்கள் அடங்கிய பொதிகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

குருணாகல் நகராட்சி எல்லைகளிலும், குளியாபிட்டிய பொலிஸ் பிரிவிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் கிரியுல்ல பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது நாடு முழுவதும் 63,600 க்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment