நாடளாவிய ரீதியாக கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை 2 மீற்றராக அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆராய இன்று தொழில்நுட்பக் குழு கூடி ஆராயவுள்ளது.

அந்தக் குழுவின் கூட்டத்தின் பின்னர், சமூக இடைவெளியை பேணுவது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.