மருத்துவ பீடங்களிலும் பிசிஆர் பரிசோதனை


நாட்டில் பரவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமை காரணமாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பல்கலைகழக மருத்துவ பீடங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதார அமைச்சு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது
.

சுகாதார அமைச்சின் செலாளரினால் இது தொடர்பில் எழுத்து மூலமாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படைய அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்களும் அதற்கு சார்ப்பாக பதிலளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஶ்ரீஜயவர்தனபுர, காலி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதெனிய பல்கலைகழகங்களில் இந்நடவடிக்கையை விரைவில் ஆரம்பிப்பதாவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க தெரிவித்திருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post