2020ம் ஆண்டிற்காக 6 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி, பிவித்துரு ஹெல உருமய, சிங்கள ராவய, அருணலு ஜனதா பெரமுன, மக்கள் சேவகர் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிஸ்ட் லெனினிச கட்சி மற்றும் சமத்துவ காட்சி ஆகியவையே இவ்வாறு புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்முறை பதிவு செய்வதற்காக ஜனவரி மாதம் முதல் அரசியல் கட்சிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததுடன் 154 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதில் 121 விண்ணப்பங்களுக்கு நேர்முக பரீட்சைகள் முன்னெடுக்கப்படுவதுடன் 6 கட்சிகளை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.