ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி - பொது போக்குவரத்தில் சென்றதாக தகவல்


ராகம வடக்கு கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். நேற்று இரவு இந்த கொரோனா நோயாளி வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. குறித்த நோயாளி இன்று காலை அவரது வீட்டில் வைத்து பாதுகாப்பு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டார். குறித்த நோயாளி பொது போக்குவரத்தினை பயன்படுத்தி தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post