விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

தேசிய கண் வைத்தியசாலை பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை...!


தற்போதைய கொவிட் 19 பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு திடீர் விபத்து, மருத்துவ சிகிச்சை மற்றும் அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்ள மாத்திரம் தேசிய கண் வைத்தியசாலைக்கு பிரவேசிக்குமாறு அந்த வைத்தியசாலை கோரியுள்ளது. இதற்கமைய நோயாளர்கள் அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளின் கண் சிகிச்சை பிரிவிற்கு சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

விசேட கண் சிகிச்சை தேவைப்படும் நோயாளர்கள், அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணரின் கடிதத்துடன் தேசிய கண் வைத்தியசாலைக்கு வருகை தர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 14 வயதிற்கு குறைவான பிள்ளைகளை அநாவசியமாக வைத்தியசாலைக்கு அழைத்துவருவதை தவிர்க்குமாறும் தேசிய கண் வைத்தியசாலை கோரியுள்ளது

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK