நாடாளுமன்றத்தில் கஞ்சா புகைப்பவர்கள் இருக்கின்றனரா என பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவிடம் கேள்வி எழுப்பியதை அடுத்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. கஞ்சாவை பயிரிடுவது சம்பந்தமாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை நியமிக்குமாறு புத்திக பத்திரண, பிரதமரிடம் கோரிக்கை விடுத்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் கஞ்சா புகைப்பவர்கள் இல்லை என்பதால், அப்படியான குழு அவசியமில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்