அக்குரஸ்ஸ மாரம்ப கால்பல வெல்பாலம் அருகிலுள்ள பக்மீகஹ பகுதியில் உள்ள படகு முனையம் அருகே, மனிதனின் கால் ஒன்று நில்வலா ஆற்றில் மிதந்து கொண்டிருந்த போது நேற்று பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
அகுரஸ்ஸ திடீர் மரண விசாரணை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், அகுரஸ்ஸ பொலிஸார் மனித இடது காலை மீட்டு, மாத்தறை பொது வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது ஒரு கொலையாக இருக்குமா அல்லது முதலை ஒன்றின் பிடியில் சிக்கி மீதமான கால் பகுதி ஆற்றில் மிதந்து வந்ததா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன தனது சகோதரனின் கால் என மரணமடைந்தவரின் சகோதரர் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK