பாகிஸ்தானிலுள்ள மதரஸாவில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் நடத்தும் மதரஸா பள்ளி ஒன்று உள்ளது. இந்த மதரஸா வளாகத்தில் மசூதி அமைந்துள்ளது. இந்த மதரஸாவில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமானோர் வளாகத்தில் கூடியிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மசூதியில் வழிபாடு நடத்திய 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK