வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - அனுர!


தமது ஆட்சியின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள மாணவர்களில் 810,000 மாணவர்கள் மந்த போசனையுடன் உள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. கர்ப்பிணித் தாய்மார் போசாக்கற்ற உணவையே உட்கொள்கின்றனர். உரிய தொழில் வாய்ப்பில்லை. தொழிலின்றி வெளிநாடுகளுக்கே செல்ல வேண்டிய நிலை. வர்த்தகம் ஒன்றை முன்னெடுக்க முடியாத நிலை. கடன் பெற்றவர்களில் பெரும்பாலானோர் இன்று அதனை செலுத்த முடியாது தவித்து வருகின்றனர். ஒரு சிலர் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்.

நாங்கள் கட்டங்கட்டமாகப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம்.

அதன்மூலம் அனைவரின் வாழ்வும் சுபீட்சமடையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்