மொட்டுவின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு நேற்று (29) இரவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்னிறுத்துவது குறித்து நேற்று பிற்பகல் கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவின் தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கொழும்பு மல்பாறையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் கட்சி காரியாலயத்தில் இவர்கள் ஒன்று கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இதில் கலந்து கொண்டிருந்தார்.
இதில், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இவர்கள் தீர்மானித்துள்ளனர்
0 Comments :
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
KA MEDIA NETWORK