சுதந்திர கட்சிக்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு!


மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கியமையை தடுத்து, முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு  எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு  இன்று (30) மீள அழைக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மாவட்ட நீதிபதி  சந்துன் விதானவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, ஒக்டோபர் 9-ம் திகதி வரை அதற்கான தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து தம்மை தன்னிச்சையாக நீக்குவதற்கு எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அந்த தீர்மானத்தை வலுவிழக்கச்செய்யுமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவர்கள் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்