நாட்டை மீட்ட ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும் - இஷாக் ரஹ்மான்


 நாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாடு ஆப்கானிஸ்தானை போல மாறிவிடும் என்று ஏற்க மறுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்திருந்தார்.

காலி நகர சபை மைதானத்தில் நேற்றைய தினம் (27) நடைபெற்ற “ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்” கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்
ரஹூமான் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;

“.. இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடு இருந்த நிலையை நாம் மறந்து விட முடியாது. அந்த நேரத்தில் நாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கூறிய போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நாடு ஆப்கானிஸ்தானை போல மாறிவிடும் என்று ஏற்க மறுத்தார். அவர் தேர்தலில் வென்றால் நாடு மீண்டும் பழைய நிலைக்குச் செல்லும்.

எனவே மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற வேளையிலும் எதிர்கட்சித் தலைவர் நிபந்தனை கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். நாட்டை மீட்ட ஜனாதிபதியை பாதுகாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்..”

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்