ஆடைத் தொழிற்சாலையொன்றில் கருச்சிதைவுகள்!


கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று இரவு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்