கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்


 
நாட்டின் சில பிரதேசங்களில் கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளையும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து சேவையிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்திலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் இன்று இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்விசாரா சேவைக்கான தேசிய கொள்கையை தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொசன் விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் அரசாங்க பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு நேற்று விசேட அறிவிப்பை வௌியிட்டிருந்தது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK


விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்