“கல்வி என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு கொடுத்தால், நாடு தானாக வளரும்” – தம்மிக்க பெரேரா

இலங்கையர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், தொடர்பாடல் மற்றும் சிந்தனைத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தொழில் வாய்ப்புகளை முழுவதுமாக உள்ளடக்கும் நோக்கத்துடன் திரு.தம்மிக்க பெரேரா “DP கல்வி” திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இத்திட்டத்தின் 61வது நிலையமானது அநுராதபுரம் நகரிலுள்ள வீரசேகரராம ஸ்ரீ பாரதிந்திர மகா பிரிவேன் வித்யாதனயவை மையமாக கடந்த ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

40 நவீன கணனிகள் பொருத்தப்பட்ட இந்த நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் பாடநெறிகளை பூர்த்தி செய்த 100 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாடும் கல்வியறிவின்றி வளர்ச்சியடையவில்லை. படிப்பறிவில்லாதவர்களைக் கொண்டு எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை.

இந்த கல்வி என்ற தடுப்பூசியை குழந்தைகளுக்கு போடும் போது நாடு தானாக உயரும். எனக்கும் இந்த நாட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே உள்ளது , என டி.பி. கல்வி நிறுவ9னத்தின் தலைவர் திரு.தம்மிக்க பெரேரா இதன் போது சிறப்புரை ஆற்றினார்.
























BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK