பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது திருகோணமலையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையும், பாராளுமன்ற உறுப்பினர் உதிக பிரேமரத்ன மீதான அனுராதபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்தையும் ஒரே மாதிரியான சட்டம், ஒழுங்கு பிரச்சினையாக கருதி, விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என சட்டம், ஒழுங்கு துறை அமைச்சர் டிரன் அலஸிடம் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.


அவ்வாறே தான் செய்வதாக அமைச்சர் தன்னிடம் உறுதியளித்ததாக மனோ தெரிவித்தார். இதுபற்றி தற்சமயம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.