முஸ்லிம் Mp க்களின் (MMDA) முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட வேண்டும் - 158 பேர் கையொப்பமிட்டு அறிக்கை


இஸ்லாம் நீதியை நிலை நாட்டுகின்றது: முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் (MMDA) தொடர்பான முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட வேண்டும்

2023 ஜூன் 8 ஆம் திகதி நீதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் இ இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தின்  (MMDA) சீர்திருத்தங்களை  முற்றிலும் குறைத்து மதிப்பிடும் வகையில்  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) முன்வைத்துள்ள கருத்துக்களை  இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் கண்டிக்கின்றோம்.

இந்த ஆவணத்தில் கையொப்பமிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிற்போக்கான றிலைப்பாடுகள் ஷரீஆவில் குறிப்பிடப்பட்டுள்ள அன்பு  கருணை மற்றும் சமாதானம் ஆகிய கோட்பாடுகளுக்கு எதிர்மாறானது. இலங்கையின் அரசியலமைப்பை நிலைநிறுத்தும் மற்றும் இஸ்லாத்தின் அறிவுசார் சிந்தனையை பிரதிநிதிதுவப்படுத்தும் இலங்கை முஸ்லிம்களின் அடையாளத்தை கட்டியெழுப்புவதற்கும் எதிராளர்களாக இவர்கள் காணப்படுகின்றனர்.

1. பால்ய திருமணத்தை சட்டபூர்வமாக வெளிப்படுத்த மறுத்தல்.

2. திருமண ஆவணங்களில் பெண்களின் கையொப்பத்தை ஏற்றுக்கொண்டு, அதன் பின் ஆண் பாதுகாவலர் கையொப்பமிடுவதை கட்டாயமாக்குவதன் மூலம் பெண்ணின் கையொப்பத்தின் வலிதுத்தன்மையை மறுத்தல்.

3. புலதார மணத்தின் தீய விளைவுகளின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த மறுத்தல்.

4. திருமணப் பதிவாளர்கள் மற்றும் காதிகள் பதவிக்கு உள்வாஙகபபடுவதிலிருந்து முஸ்லிம் பெண்களை தவிர்த்தல்.

5. விவாகரத்தின் போது பெண்களுக்கு சமத்துவமான நடைமுறைச்சட்டத்தை வழங்க மறுத்தல்.

6. விவாகரத்தின் போது Mat'aa (ஜீவனாம்சம்) இ சொத்து உரிமைகளை மறுத்தல்.

7. பிரிவு மற்றும் மத்ஹபின் அடிப்படையில் இலங்கையில் முஸ்லிம்களிடையே பிளவுகள் மற்றும் அந்தஸ்த்து வேறுபாடுகளை அமுல்படுத்துவதுடன் இஸ்லாம் சமத்துவத்திற்கான ஒரு மதம் என்பதை அங்கீகரிக்க தவறியமை.

8. முஸ்லிம் அரசியல் மற்றும் மத பிரபல்யங்களின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் காதி முறைமை மற்றும் காதி நியமனங்களை தக்கவைத்துக் கொள்வதற்கு வலியுறுத்துவதுடன் தெளிவான நியமன விதிகள் மற்றும் நடைமுறைகளிற்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை நிராகரித்தல்.

இலங்கையின் முஸ்லிம் சமூகம், குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் விவாக விவாரத்துச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் தற்போதைய  முஸ்லிம் விவாக விவாரத்துச் சட்டத்தினால  ஏற்படுகின்ற அநீதிகள் இ பாரபட்சங்கள் மற்றும் தீங்குகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு நீண்ட காலமாக கடினமாக உழைத்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். இவ்வளவு கால தசாப்தங்களிலும் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாமை முஸ்லிம் சமூகத்தின் பல தலைமுறைகளை பாதித்துள்ளது.

முஸ்லிம் விவாக விவாரத்துச் சட்ட சீர்திருத்தம் தொடர்பான முற்போக்கான முடிவுகளை முன்னர் அங்கீகரித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆவணத்தின் மூலம் தங்கள் நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளமையையிட்டு நாங்கள் அதிர்ச்சி அடைகின்றோம். இச்சட்டத்தினால் பாரிய அளவில் பாதிக்கப்படுபவர்களின் அவல நிலை மற்றும் தவறாக நடத்தப்படுதல் என்பன போன்ற விடயங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலையை இந்நடத்தை நிராகரிக்கின்றது. 

இந்த  முன்மொழிவுகள் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட சீர்திருத்தத்தை தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிடுகின்ற பிரத்தியேகமான ஆண் தலைமையிலான சமூகக் குழுக்களின் ஒரு பிரதிபலிப்பாகும். இந்த முன் மொழிவுகள் ஒரு அரசியல் உத்வேகத்திற்கான அடையாளம் மாத்திரமே தவிர இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நீண்ட கால அபிவிருத்தி நோக்க அல்ல.

மிக அவசியமான சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை பல தசாப்தங்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முறியடிக்க முயற்சிப்பதை நாங்கள் கண்டிக்கின்றோம்.

நீதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட அறிக்கைகளில் காணப்படுகின்ற முன் மொழிவுகளில் முஸ்லிம் பெண்களும் தங்களது கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆவணத்தில் கையொப்பமிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தங்களது கையொப்பங்களைவ வாபஸ் பெற வேண்டும் என்றும் முன்னோக்கி செல்கின்ற சீர்திருத்த நடைமுறைகளில் ஆக்கபூர்வமாக பங்கேற்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

சுட்டச் சீர்திருத்தங்கள் எமது சமூகத்திற்கு, குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்க கூடிய வகையில் அமைய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிக்கக்கூடிய வகையிலான தலைமைத்துவத்தை லழங்க வேண்டும் என்றும் நாம் இந்த முஸ்லிம் உறுப்பினர்களை கேட்டுக்கொள்கிறோம்.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் மக்களின் பிரதிநிதிகளிடமிருந்து அவசரமான சாதகமான நடவடிக்கைகளை நாம் எதிர்பார்க்கின்றோம். 

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK