அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாலிகளிற்கான இரத்தத் தேவையயைக் கருதிற் கொண்டு எதிர்வரும் 13.08.2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 - மாலை 04:00 மணி வரை  இரத்ததான நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள அஹ்லு ஸ்ஸுன்னாஹ் ஜூம்ஆ பள்ளிவாயலில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான ஆண், பெண் இருசாராரும் தங்கள் இரத்தங்களை வழங்கி தம் சகோதரர்களின் உயிர்காக்க உதவுமாறு உங்களை அன்பாய் அழைக்கின்றோம் .

இந்த நற்காரியத்தில் நீங்களும் பங்குபற்றுவதன் மூலம் ஓர் உயிரைப் பாதுகாக்க உதவிய நன்மையை உங்களுக்கும் அல்லாஹ் வழங்குவானாக!