தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம்! காரணம் குறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு


தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய அறிவித்துள்ளார்.

திறந்த நீதிமன்றத்தில் இன்று (08.08.2023) இந்த விடயத்தை நீதவான் அறிவித்துள்ளார்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பான முடிவை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இதனை தெரிவித்தார்.

மரபணு அறிக்கை

இதேவேளை சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர் குழு, மீண்டுமொரு சுற்று கலந்துரையாடலை நடத்துவது அவசியம் என தமக்கு அறிவித்துள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை தொடர்பான மரபணு அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதன்படி, அறிக்கையை அழைப்பதற்கு தேவையான கோரிக்கைகளை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான்அறிவித்துள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK