யாரேனும் ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது அத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தால் அதற்கு  எதிராக அந்தஸ்த்து பாராமல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர்  திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேற்படி கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர்,  கடந்த ஞாயிற்றுக்கிழமை தோட்டப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மக்களைத் தூண்டும் வகையில் பொதுப் பிரதிநிதியொருவர் பொறுப்பற்ற முறையில் தெரிவித்த கருத்து தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

தற்காப்புக்காக வன்முறைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், அரசாங்கமும் சட்டமும் எம்மை பாதுகாக்கும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அவ்வாறு செய்யாவிட்டால் அது எங்களின் உரிமை என  அந்த மக்கள் பிரதிநிதி குறிப்பிட்டிருந்தார். இது போன்ற வெறுப்பு பேச்சுக்கு ஆளாகாமல் சட்ட நடவடிக்கை எடுங்கள்  என பெருந்தோட்டங்கள் உட்பட அனைத்து மக்களையும் வேண்டி கேட்டுக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.