விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

கல்லஸ்ஸ விஷேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைகளை ஒக்டோபர் நடுப்பகுதிக்குள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை


களுத்துறை கல்லஸ்ஸ விஷேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை சேவைகளை ஒக்டோபர் மாதத்தின் நடுப்பகுதிக்குள் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கலாநிதி  கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (22) சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த புதிய விஷேட மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை துரிதப்படுத்த சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

விஷேட வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை நியமித்தல் மற்றும் வைத்தியசாலைக்கு தேவையான வைத்திய உபகரணங்களை வழங்குவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் இங்கு  கவனம் செலுத்தப்பட்டது.

ஊழியர்களை நியமிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

07 அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த வைத்தியசாலையில்  சத்திரசிகிச்சை அரங்குகள், தையல் அறைகள், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும்  கொண்டுள்ளது 

மருத்துவப் பயிற்சிக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள  களுத்துறை போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவு ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், மஹ்மோதர புதிய மகப்பேறு வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் நேற்று (21) சுகாதார அமைச்சில் சுகாதார அமைச்சர் கலாநிதி  கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில், இடம்பெற்றது 

புதிய மகப்பேறு வைத்தியசாலையை இவ்வருட இறுதிக்குள் சிகிச்சை சேவைகளுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், தேவையான விஷேட வைத்தியர்கள்,  மற்றும் தாதியர்களை வைத்தியசாலைக்கு இணைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

மஹ்மோதர புதிய மகப்பேறு வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகளுக்கு  ஜேர்மனியின் முன்னாள் அதிபர் ஹெல்முட் கோல் அவர்களால் வழங்கப்பட்ட 3000 ரூபா நன்கொடையில் ஆறு மாடி மகப்பேறு மருத்துவமனையுடன்  640 படுக்கைகள் மற்றும் 6 அறுவை சிகிச்சை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சை பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் மற்றும் அனைத்து நவீன மருத்துவ வசதிகளும் கொண்டதாக திட்டமிடப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சஞ்சீவ எதிரிமான்ன, சுகாதார அமைச்சின்  செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன, மற்றும் களுத்துறை மற்றும் மஹ்மோதர வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.






BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK