பெண்கள் குளிப்பதை CCTV மற்றும் Drone மூலம் படமெடுக்கும் அரச கட்சி உறுப்பினர்கள்..!மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரச அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இன்றைய தினம் அதிரடியாக பார்வையிட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன். மிகவும் வெக்கக் கேடான விடையம் அங்குள்ளவர்கள் Drone கமரா மூலம் அவ் ஊர் மக்கள் குளிப்பதை வீடியோ வேறு எடுக்கின்றனர் என்ற குற்றச் சாட்டும் மக்களால் முன்வைக்கப்பட்டது. காணிக்கொள்ளை, மணல் கொள்ளைகளை தொடர்ந்து இவ்வாறான ஈனமான செயல்களிலும் அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சியை சேர்ந்த சகாக்கள் ஈடுபடுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்கள் விழிப்படைய வேண்டும். கீரியோடை வாவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் கமராவை வைத்து பார்க்கும் அளவிற்கு மோசமான செயலை இப்போது தான் முதல் முதலாக பார்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்

வாவியில் வளர்ப்பு மீன் திட்டம் என்ற போர்வையில் வாவியை மறைத்து மீன் வளர்க்கப்படுவதாகவும் வாவியினுள் சிசிரிவி கமராவினை வைத்து பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர் மற்றும் சுற்று சூழல் அதிகாரிகளுடன் உரையாடிய போது இந்த ஆற்றில் மீன் வளர்ப்பதற்கு ஒருவர் அனுமதி எடுத்துள்ளதுடன் அவர் கனடாவிற்கு சென்றுள்ளார்.

தற்போது அந்த அனுமதியை வைத்து ஏனையவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனுமதி பெற்றவர் அவ்வாறு செயற்படவில்லை. புதிதாக தான் யாரோ இவ்வாறு செய்கிறார்கள்.

எனவே இங்குள்ள அதிகாரிகளுக்கும் இதனை கண்டுக்கொள்ள வேண்டாம் என்று பாரிய அச்சுறுத்தல் இருக்கலாம்.

குறித்த நன்னீர் மீன் திட்டத்தை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னெடுத்து வருவதாகவும் அப்பிரதேசத்தில் அந்த வாவியை நம்பி வயிற்றுப் பசிக்காக இறால், மீன்களைப் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை போக்கியவர்கள் அந்த நபர்களால் தாக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அந்த வாவியில் மீன்பிடித்த ஒருவரை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் வீடு திரும்பி உள்ள வேலையில் அவ்விடத்தில் யாரும் மீன் பிடிக்ககூடாது என்று பதாதை இடப்பட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

எது எவ்வாறாக இருந்தாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் மிகவும் பாரதூரமான செயற்பாடுகளாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.

அதுமட்டுமின்றி சிசிரிவி கமரா மற்றும் ட்ரோன் போன்றவற்றை பயன்படுத்தி வீடியோக்கள் எடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆற்றினை மறைத்து கூடாரம் அமைத்து மீன் வளர்ப்பதாக கூறி பெண்கள் குளிக்கும் போது சிசிரிவி கமரா மூலம் அதை அவர்கள் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு செயற்பாட்டை உலகத்திலேயே யாரும் செய்யவில்லை என்றும் இது போன்ற மோசமான நடவடிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஈடுபடுகின்றது என்றும் சாணக்கியன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK