அலி சப்ரியின் உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானம் – சபாநாயகர்


புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரீ ரஹீமின் நாடாளுமன்ற உறுப்புரிமை குறித்து இன்றைய தினம் (14.07.2023) தீர்மானிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்கள் மற்றும் தொலைபேசிகள் என்பனவற்றை நாட்டுக்குள் கொண்டு வந்தமை தொடர்பில் அலி சப்ரீ ரஹீம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்புரிமையில் ரஹீம் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது பற்றி இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அலி சப்ரீ ரஹீம் மேற்கொண்ட சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய வேண்டுமென கட்சித் தலைவர்கள் தீர்மானித்தால் உறுப்புரிமை ரத்து செய்யப்படும் என மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK