மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு!


மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று இன்று (20) அதிகாலை அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்ற போது, குறித்த சந்தேகநபர் ​​டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ள நிலையில், காயமடைந்த சந்தேக நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடையவர் எனவும், அவர் குற்றவியல் கும்பலைச் சேர்ந்த முக்கிய துப்பாக்கிதாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK