வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய போலந்து, ருமேனியா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் மற்றும் வர்த்தக மன்றத்தில் பங்கேற்கவுள்ளார்


வெளிநாட்டு அலுவல்கள்இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய 2023 ஜூன் 13 முதல் 20 வரை போலந்து, ருமேனியா மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
 
போலந்து மற்றும் ஜோர்ஜியாவுடனான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளுக்கான இலங்கையின் பிரதிநிதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தலைமை தாங்குவார். வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி, தகவல் தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு, கலாச்சாரம் மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுடனான இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் மற்றும் தற்போதுள்ள கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இந்த இருதரப்பு ஆலோசனைகளின் போது ஆராயப்படும்.

இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பான விடயங்களை நெறிப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில், இராஜாங்க அமைச்சர் ருமேனியாவுக்குச் செல்லும் தூதுக்குழுவை வழிநடத்துவார்.


அரசியல் ஆலோசனைகள் மற்றும் வணிகக் கூட்டங்களுக்குப் பக்க அம்சமாக, இலங்கைக்கும் தொடர்புடைய நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திப்பார்.


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜூன் 13

BY AZEEM KILABDEEN

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK