முசர்ரப் என்ன மூளை கலங்கிவிட்டதா...!?

 


(பொத்துவில் இப்றாஹீம் தாஹா)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் அமைப்பாளராக உருவாகி, பொத்துவில் மக்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் ஏமாற்றி தனது சுயநல அஜண்டாவை பூர்த்தி செய்ய கிளம்பியிருக்கும் புனிதர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே உங்களது மூளை கலங்கிவிட்டதா?

தூய எண்ணத்தோடு பொத்துவில் மக்களும், பொத்துவில் மக்களால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை தன் வசப்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற பின் எல்லோரையும் ஏமாற்றியுள்ளீர்களே, பாவம்.

உங்களுடைய சுயநலமும், நன்றி கெட்ட புத்தியும் நாங்களும், பொத்துவில் மக்களும், ஒட்டு மொத்த சமூகமும் அறிந்து கொண்டுள்ளோம்.

உங்களின் அரசியல் வெற்றிக்காய் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பொய்யர் பொய்யர் என்று சொல்லி வாக்கு சேகரித்தீர்கள், இன்று அவரை விட பெரிய பொய்யர் என்ற அடையாளத்தைக் கைப்பற்றியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் முசர்ரப்.

கெளரவ தலைவர் ரிசாட் பதியுதீன் போல பலமான தலைவர்தான் முஸ்லிம் சமூகத்திற்கு தேவை என மேடை மேடையாக தொண்டை கிழிய கத்தினீரே, இன்று வாய் கூசாமல் கீழ்தரமாக பேசும் நீர் எல்லாம் யோக்கியன். 

உங்களுடைய வர்த்தகத்தையும், சுக போகத்திற்காகவும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையுமே காட்டிக் கொடுத்து நல்லவன் வேஷம் போடப் பார்க்கும் உங்களைப் போன்றோரின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டே ஆக வேண்டும்.

கோட்டாவுக்கு வால் பிடித்து, பஷில் ராஜபக்சவுக்கு வால் பிடித்தீர் பின்னர் அவர்களின் தோல்வியின் பின்னர் அதிமேதகு ஜனாதிபதிக்கு வால் பிடிக்கும் நீர் எல்லாம் நிலையான அரசியல்வாதி, இந்தக் கொள்கைக்கு உங்களை ஆதரிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லவே இல்லை.

அந்நியனை அரசாழவிடும் 20க்கு கை உயர்த்தினாய், நாட்டையே விற்ற போற்ட் சிட்டி பில்லுக்கு கை உயர்த்தினாய், பஜ்ஜட்டுக்கு கை உயர்தினாய் ஆனால் உயர்த்தி நீ செல்வம் பெற்றாயே தவிர முஸ்லிம் ஜனாசாக்கள் எரிக்கப்படும் போது வாய் மூடி மெளனியாக இருந்துவிட்டீரே முசர்ரப்.

வாய் கிழிய, கிழியக் கதைக்கும் நீ எல்லாம் அரியல்வாதி. உன்னைப் போன்ற பண ஆசை பிடித்த அரசியல்வாதிகளினால் தான் அரச நிறுவனங்களில் தகுதியற்றவர்கள் பலர் அதிகாரிகளாக உள்ளனர். அதனால் தான் 15℅ நல்லவர்களும் 85% கெட்டவர்களும் உள்ளனர். ஆனால் 225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் உங்களையும் சேர்த்து எத்தனை சமூக விரோதிகள் உள்ளனர் தெரியுமா?

உங்களைப் போன்ற தண்டச் சோறுகளுக்கு சம்பளமும், ஆடம்பரமும், சலுகைகளும் வழங்குவதே இலங்கை தாய் நாடு செய்த தவறு.

பொத்துவில் மண், அம்பாரை மாவட்டம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் விற்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மாறிவிட்டீர்கள் முசர்ரப்.

அம்பாரை மாவட்டம் முழுக்க உங்களைப் போன்ற துரோகிகள் வலம் வருவதைத் தடுக்க முல்லு வேலிகள் வைக்கப்படும். மீறி வந்தால் நெய்யப்புடைக்கப்படுவீர்கள். 

முதலில் வாய்ச் சொல்லில் நிலையாக நில்லுங்கள் முசர்ரப். நேரத்திற்கு நேரம் பச்சோந்தி போல் மறாமல். உங்களுடைய முகத்திரைகள் கிழிக்கும் நேரம் ஆரம்பம்.


Azeem Mohammed

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK