விஷேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள்

சில அத்தியாவிச பொருட்களின் விலை குறைப்பு



அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. பெரிய வெங்காயம், சிகப்பு பருப்பு, டின்மீன் (உள்நாட்டு), மிளகாய் மற்றும் நெத்தலி போன்றவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தம் நாளை (21) முதல் அமுலுக்கு வரும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.இதேவேளை, ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 378 ரூபாவாகும். 425 கிராம் உள்ளுர் டின் மீன்களின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 480 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ மிளகாயின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1780 ரூபாவாக பதிவு செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ நெத்தலியின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1100 ரூபாவாகும்.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK