கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


டெங்கு இரத்தக்கசிவு நிலை காரணமாக இவர்களில் 07 சிறார்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது, அவர்களில் ஒன்பது பேர் பொது விடுதிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார்.