மாலைத்தீவிற்கு பறந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலைதீவின் தலை நகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது குறித்து இலங்கை விமானப் படை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதில், தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு அமைச்சின் முழு அனுமதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு, சுங்கம் மற்றும் ஏனைய அனைத்து சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டு ஜனாதிபதி மற்றும் அவரின் துணைவியார் ஆகியோர் மாலைத்தீவு நோக்கி செல்ல விமானம் ஒன்றை பெற்றுக் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை பாதுகாவலர்கள் இருவருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வௌியேறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Editor - Tamil

0 Comments :

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

KA MEDIA NETWORK